/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தல் விதிமீறல் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு
/
தேர்தல் விதிமீறல் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு
தேர்தல் விதிமீறல் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு
தேர்தல் விதிமீறல் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை அமைப்பு
ADDED : மார் 17, 2024 11:40 PM
ராமநாதபுரம் : லோச்பா தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் குறித்து 24 மணிநேரமும் மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
கலெக்டர் விஷ்ணுசந்திரன் கூறியுள்ளதாவது:மார்ச் 16 முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள், மற்றும் அரசு, தனியார் இடங்களில் அனுமதியின்றி உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்ற வேண்டும்.
கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை உள்ளது. 1950 மற்றும் 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை மற்றும் 04567-- 230 410, 230 411, 230 412, 230 413 ஆகிய தொலைபேசி எண்களில் மக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
தேர்தல் விதிமீறலை கண்காணிக்க 48 பறக்கும் படை குழு,24 நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் ரூ.50ஆயிரத்து மேல் கொண்டு செல்வதாக இருந்தால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
போலீசார், துணை ராணுவம் ஐந்து கம்பெனிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. அமைதியாக தேர்தல் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

