/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்
/
கூட்டுறவு வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்
ADDED : அக் 08, 2025 12:55 AM
ராமநாதபுரம்; ராமநாதபுரம், கமுதி, முதுகுளத்துார், பரமக்குடி வட்டார அலுவலகங்களில் கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தனர்.
ராமநாதபுரத்தில் 132 கூட்டுறவு வங்கிகள் சங்கம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 300 ரேஷன் கடைகள் உள்ளன.
சங்க மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நேற்று அனைத்து கூட்டுறவு வங்கி, ரேஷன்கடை ஊழியர்கள் 25 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி வட்டார அளவில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
ராமநாதபுரம் ஒன்றியம் டாக்பியா அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதே போல் கமுதி, முதுகுளத்துார், பரமக்குடி வட்டார அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் திரண்டு கோஷமிட்டனர்.
தற்போது பருவ காலம் ஆரம்பித்துள்ளதால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கடன் வழங்கும் பணி நடந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நேற்று பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள் மூடியிருந்தன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.