/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய கலெக்டர் அலுவலகத்தில் பெயர்ந்து விழும் கூரையால் ஆபத்து
/
பழைய கலெக்டர் அலுவலகத்தில் பெயர்ந்து விழும் கூரையால் ஆபத்து
பழைய கலெக்டர் அலுவலகத்தில் பெயர்ந்து விழும் கூரையால் ஆபத்து
பழைய கலெக்டர் அலுவலகத்தில் பெயர்ந்து விழும் கூரையால் ஆபத்து
ADDED : அக் 08, 2025 12:56 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தின் கூரை அடிக்கடி பெயர்ந்து விழுகிறது. நேற்று போர்டிகோ கூரை பெயர்ந்து விழுந்ததால் விபத்திற்கு முன் சீரமைக்க வேண்டும்.
பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகரில் பழைய கலெக்டர் அலுவலகம் 1984 ல் திறக்கப்பட்டது. இங்கு முதன்மைக் கல்வி அலுவலகம், ஆதார் சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கி, மகிளா நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிநிலையில் தொடர் பராமரிப்பின்றி பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தின் கூரை பல இடங்களில் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.
இந்நிலையில் நேற்று ஆதார் மையம் அருகேயுள்ள 'போர்டிகோ' கூரை பெயர்ந்து சிமென்ட் பூச்சுகள் கீழே விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
இனி மேல் மழைக்காலம் என்பதால் சேதமடைந்துள்ள கட்டடத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.