ADDED : நவ 04, 2025 10:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: வீட்டு மனை வாங்கியவர்கள், வங்கிக்கடன் உதவியுடன் வீடு கட்டுவது வழக்கம். தனியார் வங்கிகள் வீட்டு மனை கடன் திட்டங்களை அறிவித்துள்ளன. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று (நவ.,5) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் வீட்டு கடன் மேளா காலை 10:00 முதல் 4:00 மணி வரை நடை பெறும் என கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.

