ADDED : நவ 15, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 71--வது கூட்டுறவு வாரவிழா துவக்க விழாவில் கூட்டுறவு கொடியேற்றம், உறுதிமொழி ஏற்பு நடந்தது.
கூட்டுறவு கொடியை மண்டல இணைப்பதிவாளர் ஜினு ஏற்றி உறுதிமொழி வாசித்தார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. துணைப் பதிவாளர்கள் ராமகிருஷ்ணன், மணிகண்டன், ராஜகுரு, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் ரகுபதி, சிறப்பு விரிவுரையாளர்கள் தங்கமணி, நாகராஜன், பொற்செல்வன், மனோஜ், பிரகாஷ். கூட்டுறவு ஒன்றியம் காளிதாஸ், மேலாளர் ராஜேஸ்வரி பங்கேற்றனர்.
வாரவிழா நவ.14 முதல் 20 வரை நடக்கிறது. இன்று பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரைப்போட்டிகள், ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.