/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை நகராட்சியில் கவுன்சிலர் வெளிநடப்பு
/
கீழக்கரை நகராட்சியில் கவுன்சிலர் வெளிநடப்பு
ADDED : டிச 20, 2024 02:32 AM
கீழக்கரை: கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
நகராட்சி கூட்டத்திற்கு தலைவர் செகானாஸ் ஆபிதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.
நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி, இளநிலை உதவியாளர் தமிழ்ச்செல்வன், உதயகுமார், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, பொறியாளர் அருள் உட்பட ஏராளமான கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கவுன்சிலர் ஷேக் உசேன்: கீழக்கரை பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஓட்டல் என்ற பெயரில் சட்டவிரோத மது விற்பனை செய்வதாக வீடியோ வைரல் ஆகி வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை காலி செய்ய வேண்டும்.
மேலும் ஒப்பந்த பணிகள் குறித்த விபரங்களை பொது மக்கள் பார்வைக்கு நோட்டீஸ் போர்டில் ஒட்ட வேண்டும். இதனை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன் என்று வெளியேறினார்
கவுன்சிலர் முகமது பாதுஷா: கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பஸ் ஸ்டாண்டை புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் சூரியகலா: எனது கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் முறையாக ஏற்க மறுக்கிறது. பஸ் ஸ்டாண்ட் அருகே சேதமடைந்த மீன் மார்க்கெட் இயங்கியதால் அதனை அப்புறப்படுத்தி விட்டு தனியாருக்கு சொந்தமான இடத்தில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது.
எனவே பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகராட்சிக்குரிய மீன் மார்க்கெட் கட்டடத்தை கட்ட வேண்டும். சேதமடைந்த அங்கன்வாடி மையங்களை சீரமைக்க வேண்டும் என்றார்.
நகராட்சி தலைவர் செகானாஸ் ஆபிதா: வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் படிப்படியாக சரி செய்யப்படும் என்றார்.