/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் மாடுகள் தொல்லை அதிகரிப்பு
/
தொண்டியில் மாடுகள் தொல்லை அதிகரிப்பு
ADDED : ஏப் 15, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டியில் இரவில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்ஸ்டாண்ட், பாவோடி மைதானம், வட்டாணம் ரோடு, ஆரம்பசுகாதார நிலையம் அருகே, பழைய பஸ்ஸ்டாண்ட், நம்புதாளை ரோடு ஆகிய இடங்களில் நாளுக்கு நாள் மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளது.
வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். இரவில் மாடுகள் மீது வாகன ஓட்டிகள் மோதி விழுந்து காயமடைந்தால் அவர்களை காப்பாற்றக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். மாடுகளுக்கும் காயம் ஏற்படும். எனவே பேரூராட்சி அலுவலர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.