/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்ட நிர்வாகத்திற்கு சவால் விடும் மாடு உரிமையாளர்கள் தீர்வை எதிர்பார்க்கும் மக்கள்

ADDED : நவ 06, 2024 05:52 AM

பரமக்குடி : மாவட்ட நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் பரமக்குடி உட்பட அனைத்து பகுதிகளிலும் மாடுகளை ரோடுகளில் திரிய விடும் மாட்டு உரிமையாளர்கள் உள்ளனர்.
பரமக்குடி நகராட்சிக்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட மாடுகள் ரோடுகளில் திரிகின்றன. மாடுகளால் ஏற்படும் விபத்து குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து அவ்வப்போது நகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து அபராதம் விதித்தனர்.
தற்போது இது போன்ற செயல்பாடுகள் குறைந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் உட்பட அதிகாரிகள் எச்சரித்தும் மாட்டு உரிமையாளர்கள் கட்டுப்பட்டதாக தெரியவில்லை. மாறாக வீடுகள் மற்றும் கடைவீதிகளில் இருக்கும் காய்கறி உள்ளிட்ட வியாபார பொருட்களை வழிப்போக்கில் சாப்பிடும் நிலை அதிகரித்துள்ளது. இதனால் செய்வதறியாது சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல் பரமக்குடி சர்வீஸ் ரோடு உட்பட தேசிய நெடுஞ்சாலை என அனைத்து பகுதிகளிலும் மாடுகள் திரிவதால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.
தெருக்களில் மாடுகள் திடீரென துள்ளிக் குதிப்பதால் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் உயிருக்கு உத்தரவாதம் இன்றி தவிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக மாவட்ட முழுவதும் மாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.