/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழா
/
கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழா
ADDED : ஜன 16, 2025 04:57 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்களில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடந்தன.
மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு கிராமப்புறங்களில் மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளில் வண்ணம் தீட்டி கோலப்பொட்டுகள் இட்டு, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, விவசாயிகள் பொங்கல் வைத்து வணங்கினர். பின் மாடுகளுக்கு பொங்கல் வழங்கினர்.
கிராமப்புறங்களில் மாடுகள் அடைக்கப்படும் பகுதிகளில் இருந்து கயறுகள் அவிழ்த்து விடப்பட்டு தெரு சுற்றி வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கிராமப்புற இளைஞர்கள் பங்கேற்றனர்.
பல இடங்களில்விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கு ஏற்ப விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான நேற்று உழவுக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விழாவாக திருவாடானை கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழா நடந்தது.
ஆடு, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசினர். பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு கொடுத்தனர்.
பல்வேறு கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடந்தது.