/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகள் பிடிப்பு
/
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகள் பிடிப்பு
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகள் பிடிப்பு
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய மாடுகள் பிடிப்பு
ADDED : டிச 25, 2024 05:18 AM
கீழக்கரை : கீழக்கரை நகர் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப்பட்டன.
வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள் காலை, மாலை நேரங்களில் பால் கறந்து விட்டு பின்னர் மாடுகளை நகர் பகுதியில் விடுகின்றனர். இவை போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தன. இதனால் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்குமாறு பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து கீழக்கரை நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி உத்தரவின் பேரில் நகர்பகுதியில் இடையூறாக சுற்றித்திரிந்த கால்நடைகள் பிடிக்கப்பட்டு நகராட்சி அலுவலகம் முன்பு பாதுகாக்கப்பட்ட காலி இடத்தில் அடைக்கப்பட்டன.
இதன்படி 50 பசு மாடுகள், கன்றுக்குட்டிகள் பிடிபட்டன. இரண்டு நாட்களுக்குள் உரிமையாளர்கள் கால்நடை ஒன்றுக்கு ரூ.5000 அபராதம் செலுத்தி மாடுகளை மீட்டுக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில் அனைத்து கால்நடைகளும் பகிரங்க பொது ஏலம் விடப்படும் எனவும் நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.