ADDED : ஜூன் 23, 2026 10:02 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் இளம்புயல் அணி, எஸ்.கே.எப்., நண்பர்கள் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது.
இதில் 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். முடிவில் கமுதி அணி முதலிடம், இளம்புயல் அணி இரண்டாம் இடம், முதுகுளத்துார் காவல்துறை நண்பர்கள் அணி மூன்றாம் இடம், தரைக்குடி அணி நான்காம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கம், கோப்பை வழங்கப்பட்டது.
