ADDED : ஜூன் 23, 2026 10:02 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொருளாதார வசதி காரணமாக உயர்கல்வியில் சேர முடியாத மாணவர்களுக்கு உதவி செய்யுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.
பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். அதனை பெற்றோரை இழந்த 6 மாணவர்களுக்கு வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.4.65 லட்சத்தில் 4 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 9 பேருக்கு செயற்கை கால் மற்றும் காலிப்பர்களை கலெக்டர் வழங்கினார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் (ஜூன் 16) அன்று நடந்த பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
