/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தண்ணீரில் மூழ்கி வீணாகும் பயிர்கள்
/
தண்ணீரில் மூழ்கி வீணாகும் பயிர்கள்
ADDED : டிச 25, 2025 05:30 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தாளியரேந்தல் பகுதி யில் வரத்துகால்வாயில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் அதனையொட்டி உள்ள நிலத்தில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தாளியரேந்தல் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெல், மிளகாய், பருத்தி உட்பட சிறுதானிய பயிர்கள் 200க்கும் அதிகமான ஏக்கரில் விவசாயம் செய்கின்றனர்.
அவ்வப்போது பெய்த மழையால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்தது. கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் வரத்து கால்வாயை ஒட்டியுள்ள நிலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளது.தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே விவசாயத்திற்கு செலவு செய்த பணம் அனைத்தும் வீணாகி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வரும் காலத்தில் வரத்துகால்வாயை முறையாக துார் வாரி தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரில் மூழ்கிய பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

