/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலை சுருட்டு புழு நோய் பாதிப்பு வயலில் பூச்சி மருந்து தெளித்தல்
/
இலை சுருட்டு புழு நோய் பாதிப்பு வயலில் பூச்சி மருந்து தெளித்தல்
இலை சுருட்டு புழு நோய் பாதிப்பு வயலில் பூச்சி மருந்து தெளித்தல்
இலை சுருட்டு புழு நோய் பாதிப்பு வயலில் பூச்சி மருந்து தெளித்தல்
ADDED : டிச 25, 2025 05:29 AM

திருவாடானை: திருவாடானையில் இலை சுருட்டு புழு நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களில் விவசாயிகள் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் வயல்களில் நெற்பயிரில் இலை சுருட்டு புழு நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு திருவாடானை வேளாண்மை உதவி இயக்குநர் தினேஷ்வரி மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அந்நோயிலிருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
இந்நோயால் பயிர் வளர்ச்சி குறையும். இதை கட்டுப்படுத்த குளோரண் டிரானிலிபுரோல், கார்டாப் ஹைட்ரோ குளோரைடு, ப்ளூ பெண்டியாமைடு உள்ளிட்ட ரசாயன பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து ஒட்டும் திரவம் சேர்த்து 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் தெளித்து இந்நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்று அறிவுரை வழங்கினர். அதன்படி டி.கிளியூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.