தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பசும்பொன்னில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

பசும்பொன்னில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு

பசும்பொன்னில் மக்கள் கூட்டம் அதிகரிப்பு


ADDED : அக் 30, 2025 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63வது குருபூஜை விழா நேற்று முன்தினம் ஆன்மிக விழாவுடன் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று அரசியல் விழாவாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஜோதி எடுத்தும், பால்குடம், முளைப்பாரி, அலகுவேல் குத்தியும் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் சார்பில் கிராமங்களில் இருந்து பசும்பொன் மக்கள் சென்று வர வசதியாக பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக பசும்பொன்னில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

இன்று நடைபெறும் விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு கட்சி தலைவர்கள் ஏராளமானோர் மரியாதை செலுத்த உள்ளனர். தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us