/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன்னில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் ஒத்திகை
/
பசும்பொன்னில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் ஒத்திகை
பசும்பொன்னில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் ஒத்திகை
பசும்பொன்னில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் ஒத்திகை
ADDED : அக் 30, 2025 03:43 AM

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் நினைவிடம் அருகே துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63வது குருபூஜை விழா இன்று நடக்கிறது. விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் வந்தடைகிறார். அங்கிருந்து நினைவிடத்திற்கு வாகனங்களில் செல்கிறார்.
இதையடுத்து பாதுகாப்பு ஒத்திகையாக ஹெலிபேடில் இருந்து நினைவிடம் வரை சி.ஆர்.பி.எப்., போலீசார் வாகனங்களில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
பசும்பொன்னில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு, நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை சி.ஆர்.பி.எப்., போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.