/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரச்சந்தை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரால்... ரோட்டில் வியாபாரம்: போக்குவரத்து நெரிசலால் வியாபாரிகள், மக்கள் அவதி

ADDED : அக் 30, 2025 03:44 AM

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் அருகே  டி-பிளாக்  பகுதியில் வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் குளம்போல மழை நீர் தேங்கியுள்ளதால் ரோட்டில் கடைகள் வைக்கப்பட்டதால் அப்பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வியாபாரிகள், மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் அம்மா பூங்கா அருகே புதன் தோறும் வாரச்சந்தை நடக்கிறது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராம மக்கள், வெளியூர் வியாபாரிகள்  ஏராளமானோர் சரக்கு வாகனங்கள், கார், டூவீலரில் வருகின்றனர். இந்நிலையில்  கடந்த  சில நாட்களுக்கு முன்பு  பெய்த மழையால்  வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் தண்ணீர் குளம் போல பல நாட்களாக தேங்கி குப்பை கொட்டுவதால் கழிவு நீராகி நோய் பரப்பும் இடமாக மாறியுள்ளது. துர்நாற்றத்தால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.
இதன் காரணமாக நேற்று (புதன்) கடை வைக்க போதுமான இடமின்றி வியாபாரிகள் டி-பிளாக் ரோட்டில் வியாபாரம் செய்தனர். பொருட்கள் வாங்க வரும் மக்கள் ரோட்டில் வாகனங்களை நிறுத்தினர்.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.   எனவே வாரந்தோறும் வியாபாரிகள் இடம் கடைக்கு ரூ.50 முதல் ரூ.100 என  ரூ.பல ஆயிரம்  கட்டணம் வசூல் செய்யும் பட்டணம் காத்தான் ஊராட்சி நிர்வாகம், மழைநீரை அகற்றி அவ்விடத்தில் மண் கொட்டி சமன் செய்ய வேண்டும். குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள், மக்கள்  வலியுறுத்தினர்.--