/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் தினமும் நெரிசல்: விரயமாகும் நேரம்: ராமநாதபுரத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் தினமும் நெரிசல்: விரயமாகும் நேரம்: ராமநாதபுரத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு
பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் தினமும் நெரிசல்: விரயமாகும் நேரம்: ராமநாதபுரத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு
பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் தினமும் நெரிசல்: விரயமாகும் நேரம்: ராமநாதபுரத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : டிச 05, 2024 05:41 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போதிய கண்காணிப்பு இல்லாததால் காலை, மாலை நேரங்களில் கண்டபடி செல்லும் வாகனங்களால் போக்குவரத்தால் நெரிசல் வாடிக்கையாகியுள்ளது. 100 மீட்டர் ரோட்டை கடக்க 15 நிமிடம் வரை வீணாகுகிறது என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்ட் 20 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக அனைத்து பஸ்களும் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகிறது. இங்கிருந்து ராமேஸ்வரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி, பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், கடலாடி பார்த்திபனுார், மானாமதுரை, திருப்புவனம், மதுரை ஆகிய பகுதிகளுக்கும், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை,தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எப்போதும் பழைய பஸ் ஸ்டாண்ட் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.
காலை, மாலை நேரங்களில் பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பயணிப்பதால் ரயில்வே பீடர் ரோட்டில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டை கடக்க 100 மீட்டரை கடக்க 15 நிமிடம் வீணாகுகிறது.
மேலும் பயணிகளை இறக்க அரசு பஸ்கள் மெயின் ரோட்டில் நிறுத்தி ஏற்றி, இறக்குகின்றனர். பின்னால் வரும் வாகனங்கள் பயணிகளை ஏற்றி இறக்கும் வரை காத்திருப்பதால், நீண்ட வரிசையில் வாகனங்கள் செல்ல முடியாமல் தத்தளிக்கிறது. பஸ்களை பஸ் ஸ்டாண்டுக்குள் நிறுத்தி பயணிகளை இறக்கினால் போக்குவரத்து நெரிசல் குறைந்து வாகனங்கள் விரைந்து செல்ல வாய்ப்பு ஏற்படும். புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.