ADDED : செப் 04, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி:தொண்டி அருகே எஸ்.பி., பட்டினத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தொண்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின்சப்ளை செய்யப்படுகிறது.
அடிக்கடி குறைவழுத்த மின்சாரத்தில் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெப்லைசர் வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் மூலம் மின்சாரம் ஏற்றதாழ்வுடன் வருவதை பார்த்து மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் செய்துள்ளனர்.
குறைவழுத்த மின்சாரம் பிரச்னை வரும் போது யு.பி.எஸ்., வசதி இல்லாத மின்நுகர்வோர்களின் குளிர்சாதன பெட்டி, டியூப் லைட்டுகள், மின் விசிறி போன்றவை பழுதாகி வருவதாக தெரிவித்தனர்.
எனவே மின்வாரிய அதிகாரிகள் எஸ்.பி.பட்டினம் பகுதியில் குறைவழுத்த மின்சார பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.