ADDED : செப் 04, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:பரமக்குடி அருகே லட்சுமணன் குடியிருப்பு கிராமத்தில் பூமாரி அம்மன் கோயிலில் 11ம் ஆண்டு பொங்கல் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. தொடர்ந்து நேர்த்திக்கடன் எடுத்த பக்தர்கள் காப்பு கட்டினர். இதன்படி செப்.,8ல் அக்னி சட்டி, பூத்தட்டு விழா நடக்கிறது. மறுநாள் பக்தர்கள் பால்குடம் எடுத்து கரகம் மற்றும் வேல் பூட்டுதல் விழா நடக்கிறது.
அன்று அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்து பொங்கல் விழா கொண்டாடப்படும். ஏற்படுகளை கிராம விழா குழுவினர் செய்துள்ளனர்.