/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்கன்வாடி கட்டடம் சேதம் குழந்தைகளுக்கு ஆபத்து
/
அங்கன்வாடி கட்டடம் சேதம் குழந்தைகளுக்கு ஆபத்து
ADDED : அக் 27, 2025 04:13 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சி வள்ளி மாடன்வலசையில் சேதமடைந்த சிமென்ட் கூரை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. 1985ல் கட்டப்பட்ட சிமென்ட் கூரை கட்டடத்தில் தற்போது வரை 20 சிறுவர், சிறுமிகளுடன் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. சமையல் உதவியாளர் மட்டுமே மையத்தை பல மாதங்களாக கண்காணித்து வருகிறார். பெற்றோர்கள் கூறியதாவது:
மழைக்காலத்தில் சிமென்ட் கூரை வழியாக மழைநீர் கசிகிறது. நுழைவு வாயில் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. அதே சமயம் இதன் அருகே பல மாதங்களாக புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. எனவே குழந்தைகளின் நலன் கருதி புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை தரமாக கட்டி பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

