ADDED : அக் 27, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் எஸ்.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் 75. ஜோதிட தொழில் பார்த்து வரும் நிலையில், மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் வசிக்கின்றனர். நேற்று கிராமத்தில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார்.
அப்போது நிலை தடுமாறி விழுந்த போது மூச்சு திணறி ஜோதிடர் பலியானார். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

