ADDED : டிச 13, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி பெருமாள் தேவன்பட்டி பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்தது. கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது.
பெருமாள்தேவன்பட்டியில் பயிரிடப்பட்டுள்ள பீர்க்கன் செடிகள் மழைக்கு அழுகியது. செடியில் வளர்ந்து வந்த காய்கள் விளையாமல் வீணாகியது. பீர்க்கன்காய் விவசாயத்தில் செலவு செய்தும் மழையால் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

