/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அங்கன்வாடி மையத்தை சூழ்ந்த கழிவு நீர்
/
அங்கன்வாடி மையத்தை சூழ்ந்த கழிவு நீர்
ADDED : டிச 13, 2025 05:20 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பெரியார் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே மழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றத்தால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் பெரியார் நகரில் நகராட்சி பூங்கா வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்நிலையில் இவ்வளாகத்தில் செல்ல வழியின்றி மழை பெய்தால் குளம் போல கழிவுநீருடன் தண்ணீர் தேங்குகிறது. இதனால் கொசுத்தொல்லை, துர்நாற்றத்தால் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே பூங்கா வளாகத்திற்குள் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, மீண்டும் தேங்காத வகையில் அவ்விடத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

