/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் முன்மாதிரி தோட்டம் அமைப்பு
/
பள்ளியில் முன்மாதிரி தோட்டம் அமைப்பு
ADDED : டிச 13, 2025 05:21 AM

ராமநாதபுரம்: ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் முன்மாதிரி தோட்டம் அமைக்கப்பட உள்ளது.
மரக்கன்றுகள் நடுதல், தோட்டம் அமைத்துப் பராமரித்தல் போன்றவற்றை மாணவர்களிடையே பழக்கப்படுத்துவதற்கு பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மரங்கள், பூக்கள், காய்கறிகள் கொண்ட தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக நெல்லி, மா, பலா, தேக்கு, ரோஜா, மல்லிகை, பவளமல்லி, நந்தியாவட்டை, செம்பருத்தி, செவ்வரளி, வெட்சி போன்ற 80 செடிகளை ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாந்தி பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் யுனைசி, சுற்றுச்சூழல் மன்றப் பொறுப்பாசிரியர் வளர்மதி ஆகியோர் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

