/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிழக்கு கடற்கரை சாலையில் சிக்னல் கம்பங்கள் சேதம் அரசு நிதி வீணடிப்பு; வேகமாக வரும் வாகனங்களால் இரவில் விபத்து அபாயம்
/
கிழக்கு கடற்கரை சாலையில் சிக்னல் கம்பங்கள் சேதம் அரசு நிதி வீணடிப்பு; வேகமாக வரும் வாகனங்களால் இரவில் விபத்து அபாயம்
கிழக்கு கடற்கரை சாலையில் சிக்னல் கம்பங்கள் சேதம் அரசு நிதி வீணடிப்பு; வேகமாக வரும் வாகனங்களால் இரவில் விபத்து அபாயம்
கிழக்கு கடற்கரை சாலையில் சிக்னல் கம்பங்கள் சேதம் அரசு நிதி வீணடிப்பு; வேகமாக வரும் வாகனங்களால் இரவில் விபத்து அபாயம்
ADDED : நவ 16, 2025 11:15 PM

கீழக்கரை: ராமநாதபுரம் - துாத்துக்குடி, ராமேஸ்வரம், மதுரை கிழக்கு கடற்கரை சாலையில் 24 மணிநேரமும் வாகன போக்குவரத்துள்ளது. விபத்து நடக்கும் இடங்கள் கண்டறிந்து தடுக்க ரூ. பல ஆயிரம் செலவில் சோலார் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது. அவை தொடர் பராமரிப்பு இன்றி பேட்டரி பழுதாகியும், கம்பம் சேதமடைந்துள்ளன. அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது, இரவில் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம், மதுரை, துாத்துக்குடி, திருப்புல்லாணி, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று,வருகின்றன. இச்சாலையில் அதிகளவில் அடிக்கடி விபத்து நிகழக்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றில் வேகத்தை குறைப்பதற்கும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கை விழிப்புணர்வுடன் செல்வதற்கு வசதியாக விபத்து அபாயத்தை உணர்த்தும் சோலார் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022 முதல் தற்போது வரை அமைக்கப்பட்ட சோலார் மூலம் இயங்கக்கூடிய தானியங்கி ஒளிரும் தன்மை கொண்ட சிக்னல்கள் தொடர் பராமரிப்பு இன்றியும், சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டு, அவற்றில் உள்ள பேட்டரிகள் திருடப்படும் வருகிறது.
குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக கீழக்கரை செல்லும் பகுதிகளில் விபத்து அபாயம் உள்ள இடங்களிலும் ஆபத்தான வளைவுகளிலும் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த சிக்னல் கம்பங்களை முற்றிலும் அடியோடு சாய்ந்து கீழே கிடக்கிறது. கடந்தாண்டு திருப்புல்லாணி அருகே ஐந்திணை பூங்கா செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த நான்கு தானியங்கி சிக்னல் கம்பங்களின் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளும் திருடப்பட்டன.
சிக்னல் இல்லாததால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து நடக்கிறது. சாலையின் இரு புறங்களிலும் சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் உள்ளது. சில இடங்களில் வேகத்தடை அமைத்துள்ளனர். அவற்றின் மீது வெள்ளை ரிப்ளெக்டர் பூசப்படாமல் வைத்துள்ளனர். வருவாய்த்துறைனர், நெடுஞ்சாலை துறையினர், போலீசார் அடங்கிய குழு முறையாக கண்காணித்து கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சேதமடைந்துள்ள சாலையோர சோலார் சிக்னல் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
---

