ADDED : நவ 16, 2025 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் த.வெ.க., சார்பில் அரண்மனை பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டம் துவங்கி சில நிமிடங்களில் மழைபெய்ததால் நனைந்தபடியே எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து கோஷமிட்டனர்.
ரோட்டின் ஓரம் ஆர்ப்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதித்தனர். ஆனால் தடுப்புகளை தாண்டி ரோட்டின் நடுவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

