ADDED : ஏப் 12, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சியில் உள்ள கல்லக்குளம் பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இங்குள்ள டிரான்ஸ்பார்மரின் இரண்டு கம்பங்களிலும் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில் கம்பிகள் வெளியே தெரிகின்றன. கல்லக்குளம் பகுதி மக்கள் கூறியதாவது:
சேதமடைந்த மின் டிரான்ஸ்பார்மரால் விபத்து அபாயம் உள்ளது.
அதிக காற்று வீசும் போது கீழே முறிந்து விழும் அபாயம் நிலவுகிறது. எனவே கீழக்கரை மின்வாரிய அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை ஆய்வு செய்து புதிய மின்கம்பங்கள் நடுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் மற்றும் அருகே சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளன என்றனர்.

