/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடையும் கல்பார் புயல் பாதுகாப்பு மைய கட்டடம்
/
சேதமடையும் கல்பார் புயல் பாதுகாப்பு மைய கட்டடம்
ADDED : டிச 08, 2024 06:18 AM

சிக்கல், : ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்பார் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மைய கட்டடம் சேதமடைந்துள்ளது.
இந்த கட்டடத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் கட்டடத்தின்வெளிப்புற பூச்சுகள் மற்றும் உட்புற சிமென்ட் பூச்சுகள் மண் உதிர்ந்த நிலையில் பொலிவிழந்து வருகிறது. 2018 மார்ச் 1ல் 2 கோடியே 75 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் கல்பார் கிராமத்தில் புயல் பாதுகாப்பு மையக் கட்டடம் திறக்கப்பட்டது.
மன்னார் வளைகுடா கடற்கரையோர கிராம மக்களின் பயன்பாட்டிற்காகவும், மழை, வெள்ள காலங்களில் பொதுமக்கள் தங்குவதற்கு ஏற்ற வகையில் பேரிடர் காலங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்குவதற்கு ஏற்றது இந்த கட்டடம்.
இந்நிலையில் கட்டடத்தின் வெளிப்பூச்சுகள் உதிர்ந்தும், மேல்தளம் விரிசலுடன் உள்ளது. குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள இடம் முழுவதும் சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளது.
எனவே தேசிய பேரிடர் மீட்புக் குழு மேலாண்மை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் கட்டடத்தை உரிய முறையில் பராமரிக்கவும், குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.