/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் அருகே சேதமடைந்த சிறுபாலம்
/
முதுகுளத்துார் அருகே சேதமடைந்த சிறுபாலம்
ADDED : நவ 24, 2025 09:31 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சடையனேரி விலக்கு ரோட்டில் வரத்து கால்வாய் செல்லும் வழியில் உள்ள சிறுபாலத்தில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
முதுகுளத்துாரில் இருந்து காத்தாகுளம், எம்.சாலை, கோகொண்டான், மேலச்சிறுபோது வழியாக சிக்கல் செல்லும் ரோடு உள்ளது.
இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சடையனேரி அதனை சுற்றியுள்ள கிராமத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு வசதியாக சடையனேரி விலக்கு ரோட்டை கடந்து செல்ல சிறுபாலம் அமைக்கப்பட்டது.
முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பாலத்தின் அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது.
முதுகுளத்துார் பகுதியில் வரத்து கால்வாய் துார்வாரப்பட்டு வரும் நிலையில் சிறுபாலம் பராமரிப்பு பணி செய்யப்படாமல் விடப்படுகிறது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே சிறுபாலத்தை பராமரிப்பு பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

