ADDED : நவ 24, 2025 09:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடியில் ராமநாதபுரம் ரோட்டரி கிளப் மற்றும் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு ஆணையம் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட ரோட்டரி சேர்மன் மதுரம் அரவிந்தராஜ் தலைமை வகித்தார். டாக்டர் அனுசியா முன்னிலை வகித்தார். டாக்டர்கள் அருண் குமார், ராமிஷ் ராம்நாத், குகசரண், ஜான்சி ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் சஜன் ஷா, செயலாளர் மதன்குமார் மற்றும் ஏ.ஐ.ஆர்.டி., தொண்டு நிறுவனம் ஜான் பீட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.

