/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி---வேந்தோணி பாலத்தில் ஆபத்து
/
பரமக்குடி---வேந்தோணி பாலத்தில் ஆபத்து
ADDED : ஜன 01, 2025 07:49 AM

பரமக்குடி : பரமக்குடியில் இருந்து வேந்தோணி செல்லும் ரோட்டில் கால்வாய் பாலம் தடுப்புச் சுவர் சேதமடைந்த நிலையில் கழிவுநீர் கலப்பதால் ஆபத்தான நிலையில் அப்பகுதியை வாகனங்கள் கடக்கின்றன.
பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து வலது பிரதான கால்வாயில் ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்கள் பயனடைகிறது. இந்நிலையில் வேந்தோணி ரோட்டில் கால்வாய் குறுக்கிடும் நிலையில் அப்பகுதியில் பாலம் கட்டப்பட்டுள்ளது.
பாலம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகளாகும் நிலையில் தடுப்புகள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர் எதிர் திசைகளில் வாகனங்கள் செல்லும் போது பாதசாரிகள் ஆபத்தான சூழலில் செல்கின்றனர்.
டூவீலர், ஆட்டோ, அரசு பஸ்கள் உட்பட தினந்தோறும் இந்த வழியாக பல நுாறு வாகனங்கள் கடக்கின்றன. இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வுக்கு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுப்புச் சுவர் சீரமைக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
மேலும் ஒட்டுமொத்த கழிவு நீரும் இப்பகுதியில் கலக்கும் சூழலில் கால்வாய் புதைகுழியாகி சீமைக் கருவேல மரங்கள், நாணல்கள் அடர்ந்துள்ளது. இதனால் விபத்து அச்சம் அதிகரித்துள்ளது.
எனவே பாலத்தின் தடுப்புகளை சீரமைப்பதோடு கழிவு நீர் கலப்பதை தடுத்து முறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

