/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் - சக்கரகோட்டை பால ரோட்டில் கருவேல மரங்களால் ஆபத்து
/
ராமநாதபுரம் - சக்கரகோட்டை பால ரோட்டில் கருவேல மரங்களால் ஆபத்து
ராமநாதபுரம் - சக்கரகோட்டை பால ரோட்டில் கருவேல மரங்களால் ஆபத்து
ராமநாதபுரம் - சக்கரகோட்டை பால ரோட்டில் கருவேல மரங்களால் ஆபத்து
ADDED : செப் 23, 2025 03:56 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து சக்கரக்கோட்டை செல்லும் வழியில் பாலத்தின் அருகே வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி பகுதிகளை சேர்ந்த மக்கள் சக்கரக்கோட்டை வழியாக ராமநாதபுரம் நகருக்கு எளிதாக வந்து செல்லும் வகையில்ரூ.30 கோடியில் புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் கீழ்பகுதி சர்வீஸ் ரோட்டில் சக்கரகோட்டை, சேதுநகர், ஆர்.எஸ்.மடை உள்ளிட்ட ஊர்களுக்கு வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இந்த ரோடு பராமரிப்பின்றி தற்போது சீமைக்கருவேலமரங்கள் வளர்ந்துள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
எனவே சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகத்தினர் நெடுஞ்சாலைத்துறையினர் சீமைககருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.