/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் பாலத்தில் கனரக லாரியால் ஆபத்து: போலீசார் பாராமுகம்
/
பாம்பன் பாலத்தில் கனரக லாரியால் ஆபத்து: போலீசார் பாராமுகம்
பாம்பன் பாலத்தில் கனரக லாரியால் ஆபத்து: போலீசார் பாராமுகம்
பாம்பன் பாலத்தில் கனரக லாரியால் ஆபத்து: போலீசார் பாராமுகம்
ADDED : நவ 26, 2025 04:48 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் ஓட்டை உடைசலுடன் செல்லும் கனரக லாரிகளால் மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
பாம்பன் லைட் ஹவுஸ் கடற்கரையில் மீன்துறை சார்பில் ரூ. 70 கோடியில் துாண்டில் வளைவு பாலம் அமைக்கின்றனர். இதற்காக மதுரை, கரூரில் இருந்து பாராங்கற்களை கனரக லாரியில் ஏற்றிக் கொண்டு பாம்பன் வருகின்றனர். இந்த லாரிகள் தலா 20 டன்னுக்கு மேல் உள்ளதால் ஒரு நாளில் பல லாரிகள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் செல்லும் போது பல இடங்களில் அதிர்வு ஏற்படுவதால் பாலத்திற்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பல லாரிகள் ஓட்டை உடைசலுடன், குறிப்பாக பின்பக்க இரும்பு டோர் உடைந்து உள்ளதால் குண்டும் குழியுமாக கிடக்கும் பாலத்தில் செல்லும் போது டோர் மேலும் உடைந்து பாராங்கற்கள் பாலத்தில் சிதறி விழும் அபாயம் உள்ளது. அப்போது லாரியை பின்தொடர்ந்து வரும் பிறவாகனங்கள் விபத்தில் சிக்கி மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. உயிரை காவு வாங்க காத்திருக்கும் இந்த லாரிகள் மீது போலீசார், ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது கண்டனத்திற்குரியது என சமூக ஆர்வலர்கள் தெரி வித்தனர்.

