/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவிக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்
/
மாணவிக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 26, 2025 04:49 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி ஷாலினி குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்கவும், குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாதர் சங்க நிர்வாகிகள் ஆரோக்கிய நிர்மலா, வில்லியம் ஜாய்சி, ராமேஸ்வரம் தாலுகா மார்க்சிஸ்ட் செயலாளர் சிவா, நிர்வாகிகள் மாரிகுமார், கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

