/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கை அருகே ஆபத்தான தரைப்பாலம்
/
உத்தரகோசமங்கை அருகே ஆபத்தான தரைப்பாலம்
ADDED : ஜன 05, 2025 11:55 PM
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி ஊராட்சியில் இருந்து கொத்தங்குளம் செல்லும் வழியில் தரைப்பாலத்தில் தடுப்பு சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
கொத்தங்குளம்  கண்மாய்க்கு செல்லக்கூடிய ஓடை செல்கிறது. வெள்ள காலங்களில் போக்குவரத்து பல நேரங்களில் தடைபட்டது.
இந்நிலையில் கடந்த 2020ல் புதியதாக 70 மீ., நீளத்திற்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. தரைப்பாலத்தின் கீழ் ஓடை செல்லும் நிலையில் பக்கவாட்டு பகுதியில் தடுப்பு கம்பங்கள் நடைப்பட்டிருந்தன.
அவற்றில் பெரும்பாலான தடுப்பு கம்பங்கள் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
பக்கவாட்டுப் பகுதியில் திறந்த வெளியாக இருப்பதால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பாலத்தின் இரு புறங்களிலும் தடுப்புச் சுவர் எழுப்பிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

