ADDED : டிச 04, 2024 07:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடலாடி துணை மின்நிலையத்தில் இருந்தது மின் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஆஞ்சநேயர் கோயில் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு மின்சப்ளை செய்யப்படுகிறது.
தற்போது டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து கம்பியில் விரிசல் ஏற்பட்டு சாய்ந்துள்ள நிலையில் உள்ளது. இதனால் காற்று அடித்தால் விழுந்து விடும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மக்களின் நலன் கருதி டிரான்ஸ்பார்மர் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.