/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கவரிங் நகையால் உயிர் பறிபோனது கழுத்தை நெரித்து பெண் கொலை
/
கவரிங் நகையால் உயிர் பறிபோனது கழுத்தை நெரித்து பெண் கொலை
கவரிங் நகையால் உயிர் பறிபோனது கழுத்தை நெரித்து பெண் கொலை
கவரிங் நகையால் உயிர் பறிபோனது கழுத்தை நெரித்து பெண் கொலை
ADDED : நவ 06, 2024 02:12 AM
உச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நாரையூருணியில் கவரிங் நகை என தெரியாமல் நகைக்காக பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
நாரையூருணி பகுதியில் வசித்தவர் லட்சுமி 55. இவரது கணவர் செந்துார் பாண்டி இறந்து விட்டார். மகன் ஜெயபிரகாஷ் வெளி நாட்டில் வேலை செய்கிறார். மகள் பிரியாவின் கணவர் கொரோனாவால் பலியானதால் தாயும், மகளும், பேரன், பேத்திகளுடன் வசித்து வந்தனர்.
நேற்று காலை பிரியா உச்சிப்புளியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். பேரக்குழந்தைகள் பள்ளிக்கு சென்று விட்டனர். லட்சுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். மாலை 5:00 மணிக்கு பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த குழந்தைகள் பார்த்த போது லட்சுமி இறந்து கிடந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வந்து பார்த்த போது லட்சுமியின் கழுத்தில் கயிறால் இறுக்கி கொலை செய்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த கவரிங் செயினை தங்க செயின் என நினைத்து பறித்துச் சென்றுள்ளார். மகள் பிரியா புகாரில் உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை நடந்த இடத்தை எஸ்.பி., சந்தீஷ் பார்வையிட்டார். கவரிங் நகைக்கு ஆசைப்பட்டு பெண்ணின் கழுத்தை நெரித்துக்கொலை செய்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.