/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் புறவழிச்சாலையில் தொடர் விபத்துக்களால் உயிரிழப்பு
/
ராமநாதபுரம் புறவழிச்சாலையில் தொடர் விபத்துக்களால் உயிரிழப்பு
ராமநாதபுரம் புறவழிச்சாலையில் தொடர் விபத்துக்களால் உயிரிழப்பு
ராமநாதபுரம் புறவழிச்சாலையில் தொடர் விபத்துக்களால் உயிரிழப்பு
ADDED : பிப் 04, 2025 05:01 AM
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் நகருக்குள் வராமல் கிழக்கு கடற்கரை சலையை இணைக்கும் புறவழிச்சாலைகளில் தொடரும் விபத்துக்களால் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரமக்குடியில் இருந்து வரும் போது ராமநாதபுரம் புறவழிச்சாலை கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கப்படுகிறது. இதில் தேவிப்பட்டினம் செல்லும் ரோடு சந்திப்பு, பாண்டியூர் ரோடு இணைப்பு பகுதிகளில் தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது.
முறையான எச்சரிக்கை பலகைகள், விபத்தை தடுக்கும் வகையில் புறவழிசாலையில் இருந்து அணுகு சாலைக்கு செல்பவர்கள் திடீரென வாகனத்தை திருப்புவதால் பின்னால் வரும் வாகனங்கள் விபத்துக்களில் சிக்குகின்றன.
புற வழிச்சாலைகளையொட்டி மதுபான பார்கள் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மதுபான பார்களில் மது அருந்தி வாகனங்களை ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. நெடுஞ்சாலைப் பகுதிகளில் மதுபான பார்கள் அமைக்கக் கூடாது என்ற உத்தரவு உள்ளது. இதை மீறி மதுபான பார்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசலை குறைத்து விரைந்து வாகனங்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட புறவழிச் சாலையில் தொடர்ந்து விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.----------