/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏமாற்றியது பருவமழை விவசாயிகள் தவிப்பு
/
ஏமாற்றியது பருவமழை விவசாயிகள் தவிப்பு
ADDED : நவ 15, 2024 06:51 AM
ஆர்.எஸ்.மங்கலம்: பருவமழையின்றி தொடரும் வறட்சியால் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான ஆனந்துார், சோழந்துார், சனவேலி, உப்பூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் செப்., முதல் வாரத்தில் நெல் விதைப்பு செய்யப்பட்டது. விதைப்பு செய்யப்பட்ட பின் பெய்த மழையால் நெற்பயிர்கள் முளைத்தது.
அதன் பின் இடையூறாக வளர்ந்த களைகளை கட்டுப்படுத்தும் விதமாக விவசாயிகள் களைக்கொல்லி மருந்து தெளித்தும், கூலி ஆட்கள் மூலம் வயல்களில் களை பறித்தும் விவசாயப் பணியை தீவிரப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த பருவ மழை, நெல் வயல்களில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு பெய்யாததால் பெரும்பாலான நெல் வாயல்களில் தண்ணீரின்றி விவசாயிகள் உரமிடும் பணியை மேற்கொள்ள முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
தொடர்ந்து பருவமழை ஏமாற்றுவதால் ஆர்.எஸ்.மங்கலம், பாரனுார், கலங்காப்புளி , சித்துார்வாடி, கள்ளிக்குடி, உப்பூர், கொத்தியார் கோட்டை, வளமானுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெல் வயல்களில் ஈரம் இன்றி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் கவலை அடைந்த விவசாயிகள், நெல் விவசாயத்தை காப்பாற்ற தினம், தினம் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.