/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலோரங்களில் மாங்குரோவ் காடுகள் வளர்க்க முடிவு
/
கடலோரங்களில் மாங்குரோவ் காடுகள் வளர்க்க முடிவு
ADDED : ஜன 29, 2025 01:45 AM
ராமநாதபுரம்:தேவையான மழை பெய்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் அலையின் சீற்றத்தை தடுக்கும் விதமாக, மாங்குரோவ் காடுகளை விரிவாக்கம் செய்ய வனத்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
தமிழகத்தில் கடலுார், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மாங்குரோவ் காடுகள் உள்ளன. பேரழிவை ஏற்படுத்தும் சுனாமியின் சீற்றத்தை தடுத்ததில், அலையாத்தி எனப்படும் மாங்குரோவ் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாக மாங்குரோவ் காடுகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பகம் பராமரிப்பில் தொண்டி, காரங்காடு, காந்தி நகர், உப்பூர், ரெட்டை பாலம், கடலுார், முள்ளிமுனை, புதுப்பட்டினம், சம்பை, திருப்புல்லாணி, கொட்டாங்குடி ஆகிய பகுதிகளில் 1,370 ஏக்கரில் அலையாத்தி சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
இவ்வாண்டு போதிய மழை பெய்துள்ளதால், விரைவில் தொண்டி காரங்காடு, ரெட்டை பாலம் பகுதியில் மட்டும், 37 ஏக்கரில் மாங்குரோவ் செடிகளை வளர்க்க உள்ளோம். படிப்படியாக அனைத்து கடலோரங்களிலும் வளர்க்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

