/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இளம் வாக்காளர்களை அதிகம் சேர்க்க முடிவு
/
இளம் வாக்காளர்களை அதிகம் சேர்க்க முடிவு
ADDED : நவ 13, 2024 10:00 PM
திருவாடானை; இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நான்கு நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.
வாக்காளர் சுருக்க முறை திருத்தத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் நேரடியாகவும், ஆன்லைனிலும் பெறப்படுகின்றன. இந்திய தேர்தல் கமிஷன் வரும் ஜன.,1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியானவர்களை சேர்க்கவும், விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், நீக்கம் செய்யவும் முகாம்களை நடத்த உத்தரவிட்டுள்ளது.
திருவாடானை சட்டசபை தொகுதியில் 247 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இது குறித்து தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:
ஜன.1 ல் 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள் அனைவரையும் தவறாமல் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் நவ.16, 17, மற்றும் 23, 24ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
அலுவலர்கள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை இருந்து விண்ணப்பங்களை பெறுவார்கள். இளம் வாக்காளர்களை அதிகம் சேர்க்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் சிறப்பு முகாம்களுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம் என்றனர்.