/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை சிவன் கோயிலில் தீப விழா உழவாரப் பணி
/
திருவாடானை சிவன் கோயிலில் தீப விழா உழவாரப் பணி
ADDED : டிச 01, 2024 11:52 PM

திருவாடானை; கார்த்திகை தீப விழா நெருங்குவதால் திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் விளக்குகளை சுத்தம் செய்யும் உழவாரப் பணி நடந்தது.
காரத்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபம். இந்த மாதத்தில் வீடுகள், கோயில்களில் தினமும் விளக்கேற்றுவது வழக்கம்.
டிச.13 ல் திருக்கார்த்திகை தீப விழா நடைபெற உள்ளது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சன்னதிகளில் கருவறை மற்றும் சுற்று பிரகாரங்களில் தீபங்கள் ஏற்றபடும்.
இதற்காக விளக்குளை சுத்தம் செய்யும் பணிகள் நேற்று நடந்தது. மதுரை ஐராவதநல்லுார் நந்தியெம்பெருமாள் உழவார பணிக்குழுவினர் அகல் விளக்குகளை சுத்தம் செய்தனர்.