/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெல் கொள்முதலில் தாமதம் தபால் அலுவலகம் முற்றுகை
/
நெல் கொள்முதலில் தாமதம் தபால் அலுவலகம் முற்றுகை
ADDED : பிப் 17, 2024 04:51 AM

சிக்கல்: சிக்கலிலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தாமதம் செய்வதைக் கண்டித்து சி.ஐ.டி.யு., சார்பில் தபால் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடந்தது.
சி.ஐ.டி.யு., மாவட்ட துணைச் செயலாளர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
அரசு உப்பு நிறுவன தலைவர் பச்சமால் முன்னிலை வகித்தார். துணைச் செயலாளர் முருகவேல், பொருளாளர் அற்புதமணி, ஆட்டோ சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார், சிக்கல் நகர் தலைவர் ஜோசப், விவசாய சங்கம் சார்பில் தாலுகா செயலாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 73 பேரை சிக்கல் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
மதியம் 3:30 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.