/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காங்., மாவட்டத் தலைவர் நியமிக்க வலியுறுத்தல்
/
காங்., மாவட்டத் தலைவர் நியமிக்க வலியுறுத்தல்
ADDED : மே 25, 2025 05:17 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் நடந்த காங்., கட்சி நிர்வாகிகள் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத்தலைவரை நியமிக்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் காங்., கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் பொறுப்புக்குழு தலைவர் ராஜாராம்பாண்டியன் தலைமையில் நடந்தது.
தேர்தல் பணி மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் செல்வராஜ், முன்னாள் எம்.பி., ராமசுப்பு, மாநில செயலாளர்கள் அடையாறு பாஸ்கரன், ஆனந்தகுமார், முன்னாள் மாவட்ட துணை சேர்மன் வேலுச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மகளிர் காங்., தேசிய குழு உறுப்பினர் ராமலட்சுமி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
மூன்றாண்டுகளாக காலியாகவுள்ள மாவட்டத்தலைவரை நியமிக்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். மாவட்டத்தலைவர் நியமனம் தொடர்பாக சட்டசபை, வட்டார, கிராம நிர்வாகிகளிடம் எழுத்து வடிவில் கருத்துரு பெறப்பட்டது. மூத்த நிர்வாகி சோபா ரங்கநாதன், வட்டாரத்தலைவர்கள் ஆதி, சேதுபாண்டியன், வெள்ளச்சாமி, நகர் தலைவர் கோபி உட்பட பலர் பங்கேற்றனர்.