/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் சக்கர தீர்த்த குளத்து வேலியை சீரமைக்க வலியுறுத்தல்
/
தேவிபட்டினம் சக்கர தீர்த்த குளத்து வேலியை சீரமைக்க வலியுறுத்தல்
தேவிபட்டினம் சக்கர தீர்த்த குளத்து வேலியை சீரமைக்க வலியுறுத்தல்
தேவிபட்டினம் சக்கர தீர்த்த குளத்து வேலியை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஆக 20, 2025 11:33 PM
தேவிபட்டினம் : தேவிபட்டினம் நவ பாஷாண கடற்கரை எதிரே உள்ள சக்கர தீர்த்தக்குளத்து வேலியை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேவிபட்டினத்தில் உள்ள கடலில்உள்ள நவபாஷாணம் நவகிரகங்களை தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
கடற்கரையில் நீராடும் பக்தர்கள், எதிரே உள்ள சக்கர தீர்த்த குளத்தில் குளித்து செல்வது வழக்கம். ஆழமான குளமான இந்த சக்கர தீர்த்த குளத்தை சுற்றி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றிலும் அமைக்கப்பட்ட கம்பி முள்வேலி, தற்போது பல இடங்களில் சேதமடைந்து உள்ளன. இதனால் சிறுவர்களும், கால்நடைகளும் எளிதாக குளத்திற்கு செல்லும் நிலை உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சக்கர தீர்த்த குளம் (ஊருணி) அருகே, விளையாடிக் கொண்டிருந்த சிறுமி குளத்தில் தவறி விழுந்து பலியானார். இதனால், நவ பாஷாணத்திற்கு குழந்தைகளுடன் வரும் பக்தர்களும், அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சக்கர தீர்த்த குளத்தை சுற்றிலும் சேதம் அடைந்த கம்பி வேலிகளை சீரமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.