/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்திற்கு தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்
/
ராமநாதபுரத்திற்கு தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்
ராமநாதபுரத்திற்கு தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்
ராமநாதபுரத்திற்கு தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்
ADDED : அக் 06, 2025 05:42 AM
ராமநாதபுரம் : தீபாவளியையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
வரும் அக்., 20 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிவோர், கல்வி கற்போர் வெள்ளி, சனிக்கிழமைகளில் சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிடுவர்.
இந்த நாட்களில் தென்மாவட்டங்களுக்கு வரும் ரயில்கள் அனைத்திலும் டிக்கெட்கள் புக் ஆகி விட்டன.
சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு தினமும் 3 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் அக்., 17, 18 நாட்களில் காத்திருப்போர் பட்டியல் அதிகம் உள்ளன. கோவையில் இருந்து ராமநாதபுரத்திற்கு வாரந்தோறும் புதன் மட்டும் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கோவையில் இருந்து ராமநாதபுரத்திற்கு போதிய ரயில்கள் வசதி இல்லை. மீட்டர்கேஜ் பாதையாக இருந்த போது இயக்கப்பட்ட ரயில்களும் அகல ரயில் பாதை பணிகளை காட்டி நிறுத்தப்பட்டன.
அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பின் அவை மீண்டும் இயக்கப்படவில்லை.
எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்க சென்னை, கோவையில் இருந்து அக்., 17, 18ல் சிறப்பு ரயில்களை ராமேஸ்வரம் வரை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு கடந்த ஆண்டு 2 சிறப்பு ரயில்கள் ராமநாதபுரத்திற்கு இயக்கப்பட்டன. நடப்பாண்டு திருநெல்வேலி, மதுரை, செங்கோட்டைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரத்திற்கு ஒரு ரயில் கூட அறிவிக்கப்படவில்லை. சென்னையில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூர், முத்தப்பேட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு ரயில்களை இயக்க வேண்டும்.கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
கடைசி நேரத்தில் அறிவிப்பதால் பலர் சிறப்பு ரயில்களை பயன்படுத்த முடிவதில்லை. எனவே முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றனர்.