/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகையில் கட்டடக்கழிவு தேவை; அதிகாரிகளின் கண்காணிப்பு
/
பரமக்குடி வைகையில் கட்டடக்கழிவு தேவை; அதிகாரிகளின் கண்காணிப்பு
பரமக்குடி வைகையில் கட்டடக்கழிவு தேவை; அதிகாரிகளின் கண்காணிப்பு
பரமக்குடி வைகையில் கட்டடக்கழிவு தேவை; அதிகாரிகளின் கண்காணிப்பு
ADDED : நவ 13, 2024 10:04 PM

பரமக்குடி ; பரமக்குடி வைகை ஆற்றில் குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை கொட்டுவதால் அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
நீரை மையமாக வைத்து ஆற்றங்கரை நாகரீகம் தோன்றிய நிலையில் பரமக்குடி நகராட்சியும் உருவாகியுள்ளது. இதன்படி வற்றாத ஜீவ நதியாக இருந்த வைகை ஆற்றின் கரையில் நெசவு தொழிலுக்கு தேவையான நுால்களில் சாயம் ஏற்ற தண்ணீர் உகந்ததாக இருந்தது. வேளாண் தொழில் சிறக்க வைகை நீர் கை கொடுத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வைகை ஆற்றில் கட்டடம் இடிபாடுகளை கொட்டுவதும், குப்பை கொட்டுவதும் அதிகரித்துள்ளது. இதனால் சர்வீஸ் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது.
குப்பை சேகரிப்பவர்கள் மூடை கட்டி ஆறு முழுவதும் இபுறங்களிலும் வீசி செல்கின்றனர். ஒட்டுமொத்த வைகை ஆறும் கழிவுகளால் அடைக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிகளில் ஆற்றின் அகலம் சுருங்கி வருகிறது.
ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் குப்பை கலந்து அடைப்பு ஏற்படுவதால் தேவையான பகுதிகளுக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் ஊற்று நீர் தடைபடுவதுடன், விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாமல் தண்ணீர் விஷத்தன்மையாக மாறி வருகிறது.
எனவே நகராட்சி பகுதி உட்பட ஒட்டுமொத்த வைகை ஆற்றில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.