நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் எல்.ஐ.சி., கிளை அலுவலகம் அருகே அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளைத் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் பொதுகாப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 74ல் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படும் என்ற அறிவித்தார். இதை கண்டித்தும், இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் கோஷமிட்டனர். கிளைச் செயலாளர் பிரதாப், பொறுப்பாளர்கள் ராஜேஸ், செல்வகுமார் பங்கேற்றனர்.