ADDED : ஜன 06, 2024 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன்பு வி.ஏ.ஓ., சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் சண்முகவேல், செயலாளர் பழனி, பொருளாளர் வேந்தன் முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை கள ஆய்வை இணையதளத்திற்கு மாற்றுவதை கண்டித்து வி.ஏ.ஓ., க்கள் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட வி.ஏ.ஓ., க்கள் கலந்து கொண்டனர்.